டோட்டல் டைம்பாஸ்

குழும விதிகள்

View previous topic View next topic Go down

குழும விதிகள்

Post by நேத்ரா on Fri Dec 12, 2008 6:35 am

பொதுவிதி


 • இங்கே வருவது கவலையை மறக்க. எனவே முடிந்த வரை நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.
 • எங்கேயும் தாக்குதல், ஆபாசம், மதம், இனம், ஜாதி இவை இல்லாமல் இருக்க வேண்டும்.
 • யாரையும் புண்படுத்துதல் வேண்டாம்.

உறுப்பினர் கணக்கு


 • ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
 • ஒன்றுக்கு மேல் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவை முடக்கப்படும்.
 • கணக்கை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பகிரப்பட்டாதாக அறியும் கணக்குகள் முடக்கப்படும்.

பதிவுகள்


 • ஜாலியாக, உபயோகமாக, மொக்கையாக, நல்ல தகவலாக, சிறப்புகளைச் சொல்வதாக இருக்கவேண்டும்
 • மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி திட்டும் பதிவுகள் வேண்டவே வேண்டாம்.
 • அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது
 • பதிவுகளில் கண்ணியமும் கட்டுப்பாடும் இழையோட வைப்பது உறுப்பினரின் கடமை.
 • திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
 • சொந்தப் பதிவுகளை அதற்குரிய இடத்திலும் மற்றதளப் பதிவுகளை அதற்குரிய இடத்திலும் பதித்து உண்மையான படைப்பாளிகளுக்கு மதிப்பு தரும் விதமாக அவரின் பெயர் / அல்லது மூலத்தளத்தின் பெயரைச் சொல்லி நன்றி தெரிவிக்க வேண்டும்
 • அரசியல் களத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய, சமுதாயத்தை மேன்மைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் பேசுங்கள். கட்சி ரீதியான ஆதரவு, எதிர்ப்புப் போக்கை அறவே தவிருங்கள்.
 • விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு.


கையெழுத்து


 • 4 வரிக்கு மேல் வேண்டாம்
 • எழுத்தின் அளவு சாதாரண அளவில் இருக்கவேண்டும்.
 • படம் வைக்கிறவங்க கைநாட்டுன்னு அர்த்தமாம். அதனால படம் வேணாம்.
 • கையெழுத்தை விட பதிவுகள் கட்டாயம் பெருசா இருந்தே ஆகணும். Very Happy

விவாதக்களம்


 • வாதங்கள் சுவையாக இருக்கட்டும். தாக்குதல் வேண்டாம். கண்ணியமான வார்த்தைகளைக் கையாளுங்கள்.
 • வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
 • குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
 • விவாத முடிவை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 • ஒரு மாதத்திற்கு மேல் விவாதிக்கப்படாத திரிகளில் கருத்துகள் பட்டியலாக தொகுக்கப்பட்டு முடிவுரை எழுதுதல் திரி தொடங்கியவ்ர் கடமை. அவரால் இயலாத பட்சத்தில் மேற்பார்வையாளர்களின் உதவியை நாடவும்.

உறுப்பினர்களுடன் பழகும் முறை: • அன்பு, பண்பு, கண்ணியம் - தவறாமல் கடைபிடியுங்கள்
 • இணையம் ஒரு மாய உலகம். எனவே எச்சரிக்கையைக் கடைபிடியுங்கள்
 • உங்கள் சொந்தவிவரங்கள், படங்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
 • தனிமடல் வசதியை தவறாக ப்யன்ப்டுத்தாதீர்க்ள்

குழுமத்தில் அமைதி, மகிழ்ச்சி, கண்ணியம் நிலவ விதிகளில் தேவைக்கேற்ப மாறுதல்கள் ஏற்படலாம். எனவே உறுப்பினர்கள் அவ்வப்போது விதிகளை மீள்பார்வை செய்து தெரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: குழும விதிகள்

Post by தமிழ்ப்பாவை on Mon Jan 12, 2009 9:20 am

பொறுப்பாளர்களுக்கு வணக்கம். Smile

விதிகளை படித்து விட்டேன். (நினைவிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்Shocked)

அதிகபட்சமாக அனைத்தையும் சரியாக, முறையாக பின்பற்றுவேன்.

நன்றிகள்.

‍‍‍தமிழ்ப்பாவை
avatar
தமிழ்ப்பாவை
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 12
Points :
2 / 1002 / 100

Reputation : 0
Points : 161850
Registration date : 12/01/2009

View user profile

Back to top Go down

Re: குழும விதிகள்

Post by கலாபன் on Fri Jan 30, 2009 2:10 am

என்னால் இயன்றவரை விதிகைளை காத்து கண்ணியமாக இருப்பேன்.
avatar
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 160950
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Re: குழும விதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum